விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தென் ஆப்பிரிக்க மகளிர் மீண்டும் வெற்றி: தொடரை இழந்தது இந்தியா

​இந்திய மகளிருக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :21 மார்ச் 2021, 4:52 pm

DIN


இந்திய மகளிருக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை 45 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அதிரடி தொடக்கம் தந்தார்.

இதன்பிறகு, லௌரா வோல்வார்தட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் விளாசி தென் ஆப்பிரிக்காவின் வெற்றியை உறுதி செய்தார். 

கடைசி பந்து வரை சென்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.