இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சிஎஸ்கே அணியின் புதிய சீருடை!

மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளதால் மூன்று நட்சத்திரங்களும் சீருடையில் இடம்பெற்றுள்ளன. 

News image
Updated On :25 மார்ச் 2021, 6:02 am

DIN

இந்த வருட ஐபிஎல் போட்டியில் புதிய வடிவமைப்பிலான சீருடையுடன் களமிறங்குகிறது சிஎஸ்கே அணி.

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியின் 14-வது பருவம் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி நிறைவடைகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. எனினும் கரோனா தொற்று அச்சம் காரணமாக, முன்னெச்சரிக்கையாக தொடக்க ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. 

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சீருடையின் வடிவத்தை முதல்முறையாக மாற்றியுள்ளது. 2008 முதல் ஒரே மாதிரியான சீருடையை அணிந்து வரும் சிஎஸ்கே வீரர்கள் இந்தமுறை புதிய வடிவமைப்பிலான சீருடையை அணிந்து விளையாடவுள்ளார்கள். சிஎஸ்கே அணியின் புதிய சீருடையை தோனி அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதன் விடியோவை சிஎஸ்கே நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்தைக் கெளரவிக்கும் வகையில் ராணுவ சீருடையின் நிறம், சிஎஸ்கே சீருடையின் தோள்பட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் சிஎஸ்கே அணி மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளதால் மூன்று நட்சத்திரங்களும் சீருடையில் இடம்பெற்றுள்ளன. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.