தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இது 7-வது முறை: தொடர்ச்சியாக நான்கு அரை சதங்கள் அடித்த விராட் கோலி!

இந்திய கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிராக மீண்டுமொரு அரை சதம் எடுத்துள்ளார்.

News image
Updated On :26 மார்ச் 2021, 10:18 am

DIN

இந்திய கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிராக மீண்டுமொரு அரை சதம் எடுத்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து ஆமதாபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி மீண்டும் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் காயத்தால் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ள கேப்டன் மார்கனுக்குப் பதிலாக மலான் அணியில் இடம்பெற்றுள்ளார். லியம் லிவிங்ஸ்டோன் அறிமுகமாகியுள்ளார். மார்க் வுட்டுக்குப் பதிலாக ரீஸ் டாப்லி தேர்வாகியுள்ளார். பட்லர் அணிக்குத் தலைமை தாங்குகிறார். இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயருக்குப் பதிலாக ரிஷப் பந்த் களமிறங்கியுள்ளார்.

14-வது ஓவரில் இந்திய கேப்டன் விராட் கோலி, டாம் கரண் பந்தில் பவுண்டரி அடித்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 3-ம் நிலை வீரராக 10,000 ரன்கள் எடுத்துள்ளார் விராட் கோலி. ரிக்கி பாண்டிங்கும் கோலியும் மட்டுமே 3-ம் நிலையில் 10,000 ஒருநாள் ரன்கள் எடுத்த வீரர்கள். 

ஒரே நிலையில் தொடர்ந்து விளையாடி மூன்று வீரர்கள் மட்டுமே 10,000 ஒருநாள் ரன்கள் எடுத்துள்ளார்கள். சச்சின் 2-ம் நிலையிலும் பாண்டிங், கோலி ஆகியோர் 3-ம் நிலையிலும் 10,000 ரன்களை எடுத்துள்ளார்கள். இதில் மிக விரைவாக, 190 இன்னிங்ஸில் இந்த இலக்கை எட்டியுள்ளார் விராட் கோலி. 

இந்நிலையில் ராகுலுடன் அருமையான கூட்டணி அமைத்த விராட் கோலி, 62 பந்துகளில் அரை சதமெடுத்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக நான்கு அரை சதங்கள் எடுத்துள்ளார். அதேபோல தொடர்ச்சியாக நான்கு அல்லது அதற்கும் அதிகமான அரை சதங்களை 7 முறை அடித்துள்ளார் விராட் கோலி.

இதுவரை 253 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள விராட் கோலி, 43 சதங்களும் 62 அரை சதங்களும் எடுத்துள்ளார். 

இன்றைக்காவது விராட் கோலி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 66 ரன்களில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 66 ரன்களில் வெளியேறினார் கோலி.

இந்திய அணி 32 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 60 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.