6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இங்கிலாந்து, கேகேஆர் அணிகளுக்காக விளையாடிய வீரர் ஓய்வு அறிவிப்பு

ஐபிஎல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :15 மே 2021, 11:51 am

DIN


ஐபிஎல் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னி ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2014-ல் இங்கிலாந்து அணிக்காக 10 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் விளையாடியவர் ஹாரி கர்னி. 2019 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 8 ஆட்டங்களில் விளையாடி 7 விக்கெட்டுகளை எடுத்தார். 

இந்நிலையில் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை ஹாரி கர்னி வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

கடந்த 24 வருடங்களாக கிரிக்கெட் தான் என் வாழ்க்கை. அது எனக்கு அற்புதமான பயணத்தை அளித்ததை எப்போதும் மறக்க முடியாது. இங்கிலாந்து, ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியதும் சொந்த மண்ணிலும் வெளிநாட்டிலும் பிளாஸ்ட், பிக் பாஷ், சிபிஎல் போட்டிகளை வென்றதும் என் கனவுகளைத் தாண்டி நிகழ்ந்த சாதனைகள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.