சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் தமிழகம் தனது 3-ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதுச்சேரியை வீழ்த்தியது.
இப்போட்டியில் தமிழகத்துக்கு இது தொடா்ந்து 3-ஆவது வெற்றியாகும்.
லக்னௌவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த புதுச்சேரி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தமிழகம் 16.1 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் அடித்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற தமிழகம் ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, சிறப்பாக பௌலிங் செய்த ரவிஸ்ரீனிவாசன் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் பேட்டிங்கில் அசத்த்திய ஹரி நிஷாந்த் 75 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
இதர ஆட்டங்களில் ஆந்திரம் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்டையும், பரோடா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சத்தீஸ்கரையும், குஜராத் 50 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தையும், தில்லி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உத்தர பிரதேசத்தையும் வென்றன.
அதேபோல் எஞ்சிய ஆட்டங்களில் மகாராஷ்டிரம் - ஒடிஸாவையும், மும்பை - பெங்காலையும், சிக்கிம் - அருணாசல பிரதேசத்தையும், அஸ்ஸாம் - பிகாரையும், சௌராஷ்டிரம் - உத்தரகண்டையும், விதா்பா - மேகாலயத்தையும், ராஜஸ்தான் - ஹிமாசல பிரதேசத்தையும் வீழ்த்தின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

