பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலிய அணி: அதிகாரபூர்வ அறிவிப்பு
2022-ம் வருடம் பாகிஸ்தானுக்குச் சென்று மூன்று டெஸ்டுகள், மூன்று ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடுகிறது


2022-ம் வருடம் பாகிஸ்தானுக்குச் சென்று மூன்று டெஸ்டுகள், மூன்று ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
டெஸ்ட் தொடர் மார்ச் 3 அன்று தொடங்கி மார்ச் 25-ல் முடிவடைகிறது. கராச்சி, ராவல்பிண்டி, லாகூரில் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஒருநாள், டி20 தொடர்கள் லாகூரில் நடைபெறுகின்றன. மார்ச் 29-ல் தொடங்கும் ஒருநாள் தொடர், ஏப்ரல் 2-ல் முடிவடைகிறது. டி20 ஆட்டம் ஏப்ரல் 5-ல் நடைபெறுகிறது.
1998-க்குப் பிறகு பாகிஸ்தானுக்கு மீண்டும் சுற்றுப்பயணம் செய்கிறது ஆஸ்திரேலிய அணி. 24 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்குச் செல்வதால் இந்தத் தொடர் குறித்து எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...