தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

2027 ஒருநாள் உலகக் கோப்பை: அணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

2027 ஒருநாள் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா  ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.

News image
Updated On :17 நவம்பர் 2021, 11:25 am

DIN

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.

2027 ஒருநாள் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா  ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அப்போட்டியில் தரவரிசையில் அடிப்படையில் 10 அணிகள் நேரடியாகப் பங்குபெறும். உலக அளவிலான தகுதிச்சுற்றின் அடிப்படையில் மேலும் 4 அணிகள் ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்கும். இதன்மூலம் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தின் முடிவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்காகக் கடைப்பிடிக்கப்படும் ஒருநாள் சூப்பர் லீக் நடைமுறை முடிவுக்கு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.