டெஸ்ட்: அதிக ரன்களைக் குவித்து வரும் இலங்கை வீரர்

இந்த 6 இன்னிங்ஸில் ஒரு இரட்டைச் சதமும் 2 சதங்களும் 3 அரை சதங்களும் எடுத்துள்ளார்.
டெஸ்ட்: அதிக ரன்களைக் குவித்து வரும் இலங்கை வீரர்
Published on
Updated on
1 min read

காலேவில் இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நடைபெற்று வருகிறது.

4-வது நாளில் மே.இ. தீவுகள் அணி வெற்றி பெற 348 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதல் இன்னிங்ஸில் கேப்டன் திமுத் கருணாரத்னே 147 ரன்கள் எடுத்தார். 2-வது இன்னிங்ஸில் 104 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் கடந்த 6 இன்னிங்ஸிலும் அரை சதமெடுத்து அதிக ரன்களைக் குவித்து வருகிறார். 

33 வயது கருணாரத்னே, 72 டெஸ்டுகளில் விளையாடி 12 சதங்களுடன் 5176 ரன்கள் எடுத்துள்ளார்.

மார்ச் மாதம் முதல் இதுவரை டெஸ்டில் விளையாடிய 6 இன்னிங்ஸிலும் ஒவ்வொரு முறையும் அதிக ரன்களைக் குவித்து கவனம் ஈர்த்து வருகிறார் கருணாரத்னே. இந்த 6 இன்னிங்ஸில் ஒரு இரட்டைச் சதமும் 2 சதங்களும் 3 அரை சதங்களும் எடுத்துள்ளார்.

திமுத் கருணாரத்னே: டெஸ்டில் கடைசி 6 இன்னிங்ஸில் எடுத்த ரன்கள்

75 vs மே.இ. தீவுகள் 
244 vs வங்கதேசம் 
118 vs வங்கதேசம் 
66 vs வங்கதேசம் 
147 vs மே.இ. தீவுகள்
83 vs மே.இ. தீவுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com