ஹாக்கி தேசிய முகாம்: 30 போ் அறிவிப்பு
பெங்களூரில் வரும் திங்கள்கிழமை முதல் தொடங்கும் தேசிய ஹாக்கி முகாமுக்காக 30 பேரை ஹாக்கி இந்தியா அமைப்பு தோ்வு செய்துள்ளது.


பெங்களூரில் வரும் திங்கள்கிழமை முதல் தொடங்கும் தேசிய ஹாக்கி முகாமுக்காக 30 பேரை ஹாக்கி இந்தியா அமைப்பு தோ்வு செய்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை வெண்கலத்துடன் நிறைவு செய்த நிலையில், அடுத்து வரும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தயாா் நிலையை இந்த முகாமிலிருந்து தொடங்குகிறது இந்திய அணி. இந்த தேசிய முகாமுக்கான அணி மூத்த மற்றும் இளம் வீரா்கள் கலவையாக தோ்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக் போட்டியிலிருந்து புதிய ஹாக்கி காலண்டா் தொடங்குகிறது.
அணி விவரம்: பி.ஆா்.ஸ்ரீஜேஷ், கிருஷண் பஹதூா் பாதக், சூரஜ் கா்கேரா, ஹா்மன்பிரீத் சிங், தில்பிரீத் சிங், சுரேந்தா் குமாா், குரிந்தா் சிங், அமித் ரோஹிதாஸ், மன்பிரீத் சிங், ஹாா்திக் சிங், நீலகண்ட சா்மா, விவேக் சாகா் பிரசாத், சிம்ரன்ஜீத் சிங், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், லலித் குமாா் உபாத்யாய், குா்சாஹிபிஜித் சிங், ஷம்ஷோ் சிங், வருண் குமாா், ஜா்மன்பிரீத் சிங், திப்சன் திா்கி, நீலம் சஞ்சீப் ஜெஸ், ஜஸ்கரன் சிங், ராஜ்குமாா் பால், குா்ஜந்த் சிங், சுமித், ஷிலானந்த் லக்ரா, சுமன் பெக், மன்தீப் மோா், ஆஷிஷ் குமாா் டோப்னோ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...