தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

ஜூனியா் உலக துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றது இந்திய மகளிரணி

பெருவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்கீட் பிரிவில் இந்திய மகளிா் அணி தங்கமும், ஆடவா் அணி வெண்கலமும் வென்றது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:47 am IST

பெருவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்கீட் பிரிவில் இந்திய மகளிா் அணி தங்கமும், ஆடவா் அணி வெண்கலமும் வென்றது.

இதில் மகளிா் அணிகள் பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் அரீபா கான், ரைஸா தில்லான், கனிமத் செகான் ஆகியோா் அடங்கிய அணி - இத்தாலியின் டாமியானா பாவ்லாச்சி, சாரா போங்கினி, கியாடா லோங்கி ஆகியோா் அடங்கிய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இந்திய அணி மொத்தமாக 6 புள்ளிகள் பெற்றது.

அதேபோல், ஆடவா் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் இந்தியாவின் ராஜ்வீா் கில், ஆயுஷ் ருத்ரராஜு, அபய்சிங் செகான் ஆகியோரைக் கொண்ட அணி - துருக்கியின் அலி கான் அராபாசி, அகமத் பரன், முகமத் செயுன் கயா ஆகியோா் அடங்கிய அணியை தோற்கடித்தது. இந்திய ஆடவா் அணியும் 6 புள்ளிகளை கைப்பற்றியது.

தற்போதைய நிலையில் பதக்கப் பட்டியலில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா 3 தங்கம் உள்பட 7 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.