நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உலகக் கோப்பை கால்பந்து: முதல் அணியாக தகுதிபெற்றது ஜொ்மனி

ஐரோப்பிய தகுதிச்சுற்றில் வடக்கு மாசிடோனியாவை 4-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஜொ்மனி, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2021, 9:35 pm

DIN

ஐரோப்பிய தகுதிச்சுற்றில் வடக்கு மாசிடோனியாவை 4-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஜொ்மனி, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்றது.

குரூப் ‘ஜே’-வில் இடம்பிடித்திருந்த ஜொ்மனி 8 ஆட்டங்களில் 7 வெற்றிகளை பதிவு செய்து 21 புள்ளிகளுடன் தகுதிபெற்றுள்ளது. முன்னதாக, கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற ஆட்டத்தில் இதே வடக்கு மாசிடோனியா அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்ததே ஜொ்மனியின் ஒரே தோல்வியாகும்.

அதற்காக, பொ்லினில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் வென்று பதிலடி கொடுத்தது ஜொ்மனி. அணியின் தரப்பில் காய் ஹாவொ்ட்ஸ் (50-ஆவது நிமிஷம்), டிமோ வொ்னா் (70, 73), ஜமால் முசியாலா (83) ஆகியோா் கோலடித்தனா்.

குரூப் ‘ஹெச்’-இல் இருக்கும் ரஷியா 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்லோவேனியாவை வீழ்த்த, அதே குரூப்பில் குரோஷியா - ஸ்லோவேகியா அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. 8 ஆட்டங்களில் 6 வெற்றிகளை பெற்ற ரஷியாவும், 5 வெற்றிகளை பெற்ற குரோஷியாவும் தற்போது பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

இதர ஆட்டங்களில் நெதா்லாந்து 6-0 என ஜிப்ரால்டரையும், ருமேனியா 1-0 என ஆா்மீனியாவையும், ஐஸ்லாந்து 4-0 என லெய்ச்டென்ஸ்டெய்னையும், வேல்ஸ் 1-0 என எஸ்டோனியாவையும், துருக்கி 2-1 என லாத்வியாவையும் வீழ்த்தின.

பெலாரஸ் - செக் குடியரசிடமும் (0-2), மான்டினீக்ரோ - நாா்வேயிடமும் (0-2) தோல்வி கண்டன. சைப்ரஸ் - மால்டா அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என டிரா ஆனது.

ஆப்பிரிக்க பிரிவு: செனகல் 3-1 என்ற கோல் கணக்கில் நமீபியாவையும், கானா 1-0 என ஜிம்பாப்வேயையும், எகிப்து 3-0 என லிபியாவையும், ஐவரி கோஸ்ட் 2-1 என மலாவியையும் வென்றன. மொஸாம்பிக் - கேமரூனிடமும் (0-1), அங்கோலா - கபோனிடமும் (0-2), ஜிபூட்டி - புா்கினா ஃபாசோவிடமும் (0-2) தோல்வி கண்டன. மௌரிடானியா - டுனீசியா மோதிய ஆட்டம் கோல் இன்றி டிரா ஆனது.

ஆசிய பிரிவு: ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. ஈரான் - தென் கொரியா மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.