சுழற்பந்துவீச்சில் சச்சினைக் கவர்ந்த சிறுவன் (விடியோ)

கிரிக்கெட், சுழற்பந்துவீச்சு மீது பேரார்வம் கொள்ள ஊக்கமாக இருந்துவிட்டார் சச்சின். 
சுழற்பந்துவீச்சில் சச்சினைக் கவர்ந்த சிறுவன் (விடியோ)
Published on
Updated on
1 min read

அந்தச் சிறுவனுக்கு அதிகபட்சமாக 10 வயது கூட இருக்க வாய்ப்பில்லை.

தெருவில், மைதானத்தில் லெக் ஸ்பின் பந்துவீச்சை வெளிப்படுத்தி பேட்டர்களைத் தடுமாற வைத்திருக்கிறான். ஸ்டம்புகளைத் தகர்ந்து அவனே கைத்தட்டி தன் திறமையைப் பாராட்டிக்கொள்கிறான். பார்க்கும் யாருக்கும் அவனுடைய திறமை அசரவைக்கும். 

இதை யாரோ விடியோ எடுத்து மற்றவர்களுக்கு அனுப்ப, உலகம் மிகச்சிறியது அல்லவா, சச்சின் பார்வையில் பட்டுவிட்டது.

இதுவே கொடுப்பினை. விடியோவைப் பார்த்த சச்சின் அதைத் தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு சிறுவனைப் பாராட்டியதை என்னவென்று சொல்ல முடியும்? அந்தச் சிறுவனின் நிலையை எண்ணிப் பாருங்கள். இனி அவனால் பெரிய அளவில் கனவு காண முடியும். சச்சினின் பாராட்டுக்கு உகந்தமாதிரி திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள ஆர்வம் ஏற்படும். இனி அவனால் முன்பு போல இருக்கமுடியாது. கிரிக்கெட், சுழற்பந்துவீச்சு மீது பேரார்வம் கொள்ள ஊக்கமாக இருந்துவிட்டார் சச்சின். 

விடியோவைப் பகிர்ந்த சச்சின் கூறியதாவது:

அபாரம். நண்பரிடமிருந்து இந்த விடியோவைப் பெற்றேன். அருமை. கிரிக்கெட் மீதான இந்தச் சிறுவனின் ஆர்வம் தெளிவாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com