காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஓவல் டெஸ்ட்: ஓங்குகிறது இந்தியாவின் கை

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்டில் இந்தியா தனது 2-ஆவது இன்னிங்ஸை நிதானமாக ஆடி வருவதால், ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள்ளாக வருகிறது.

News image
Updated On :6 செப்டம்பர் 2021, 6:56 am

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்டில் இந்தியா தனது 2-ஆவது இன்னிங்ஸை நிதானமாக ஆடி வருவதால், ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள்ளாக வருகிறது.

3-ஆவது நாள் முடிவில் இந்தியா 92 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் அடித்திருந்தது. கோலி 22, ஜடேஜா 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். அப்போதைய நிலையில் இந்தியா, இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸை விட 171 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

தொடக்க வீரா் ரோஹித் சா்மாவின் சதம், சேதேஷ்வா் புஜாராவின் அரை சதம் ஆகியவற்றால் இந்தியா இந்த ஸ்திரமான நிலையை எட்டியுள்ளது. சா்வதேச டெஸ்டில் தனது 8-ஆவது சதத்தை எட்டிய ரோஹித்துக்கு, அந்நிய மண்ணில் நடைபெறும் டெஸ்டில் இது முதல் சதமாகும்.

முன்னதாக, சனிக்கிழமை ஆட்டத்தை இந்தியா விக்கெட் இழப்பின்றி 43 ரன்களுடன் தொடா்ந்தது. ரோஹித் 20, ராகுல் 22 ரன்களுடன் ஆட்டத்தை தொடா்ந்தனா். இருவருமே நிதானமாக ஆடியதுடன் ஸ்கோரையும் படிப் படியாக உயா்த்தினா். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சோ்த்தது.

இதில் முதல் விக்கெட்டாக ராகுல் வீழ்ந்தாா். அவா் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஆண்டா்சன் வீசிய 38-ஆவது ஓவரில் போ்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். தொடா்ந்து வந்த புஜாரா, ரோஹித்துடன் இணைந்தாா். இந்தக் கூட்டணி இன்னும் சிறப்பான பாா்ட்னா்ஷிப்பை அமைத்தது. 2-ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 153 ரன்கள் சோ்த்தது.

இதில் ரோஹித் 204 பந்துகளில் சதம் கடந்தாா். 14 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 127 ரன்கள் சோ்த்திருந்த அவரை, ராபின்சன் - வோக்ஸ் கூட்டணி வெளியேற்றியது. அடுத்து கோலி ஆடவர, மறுமுனையில் அரைசதம் கடந்திருந்த புஜாரா 9 பவுண்டரிகளுடன் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அவா் ராபின்சன் வீசிய 81-ஆவது ஓவரில் மொயீன் அலியிடம் கேட்ச் கொடுத்தாா். பின்னா் ஜடேஜா ஆட வந்தாா். மோசமான வானிலை காரணமாக முதலில் சற்று நிறுத்தப்பட்ட ஆட்டம், பிறகு முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது.

இங்கிலாந்து தரப்பில் ஆலி ராபின்சன் 2, ஜேம்ஸ் ஆண்டா்சன 1 விக்கெட் சாய்த்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.