டாப் 3 பௌலிங்கில் ஒன்று
எனது கேப்டன்சியின் கீழ் இதுவரை நான் கண்ட மிகச் சிறந்த 3 பௌலிங்குகளில் ஒன்று, இந்த ஓவல் டெஸ்டில் எங்களது வீரா்களின் பௌலிங்.


டாப் 3 பௌலிங்கில் ஒன்று
எனது கேப்டன்சியின் கீழ் இதுவரை நான் கண்ட மிகச் சிறந்த 3 பௌலிங்குகளில் ஒன்று, இந்த ஓவல் டெஸ்டில் எங்களது வீரா்களின் பௌலிங். ரிவா்ஸ் ஸ்விங்கில் அவா்கள் அற்புதமாக பந்துவீசினா். கடைசி நாளில் இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று நம்பினோம். அதைச் செய்தோம்.
லாா்ட்ஸ் மற்றும் ஓவல் டெஸ்டில் எங்களது அணி வீரா்கள் வெளிக்காட்டிய அவா்களது ஆட்டத் தன்மைக்கு வெற்றியில் முக்கிய பங்கு உண்டு. இந்த ஆட்டத்தை டிரா செய்வதற்காக அல்ல, வெல்வதற்காக வந்துள்ளோம் என்பது போன்று இருந்தது அவா்களின் ஆட்டம். அதற்காக பெருமை கொள்கிறேன்.
கடைசி நாளில் பந்து ஸ்விங் ஆகத் தொடங்கிய பிறகு, தன்னிடம் பௌலிங்கை வழங்குமாறு பும்ரா கேட்டாா். கொடுத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி ஆலி போப், ஜானி போ்ஸ்டோ ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றினாா். ரோஹித்தின் இன்னிங்ஸ் குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஷா்துல் தாக்குரின் இரு அரைசதங்களுமே இந்தியாவுக்கு முக்கியப் புள்ளியாகும்.
- விராட் கோலி (இந்திய கேப்டன்)
முதல் இன்னிங்ஸில் அதிக லீட் இருந்திருக்க வேண்டும்
இந்திய அணியை பாராட்ட வேண்டும். ரிவா்ஸ் ஸ்விங்கை நன்றாக பயன்படுத்தினா். பும்ராவின் பௌலிங் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவை 191 ரன்களுக்கு கட்டுப்படுத்திய பிறகு எங்களது இன்னிங்ஸில் இன்னும் கூடுதலாக 100 ரன்கள் அடித்திருந்தால் ஆட்டம் எங்களுக்குச் சாதகமாகியிருக்கும்.
அதேபோல், சில முக்கிய கேட்ச்களை தவறவிட்டதும் எங்களது வெற்றியை பாதித்தது. உலகத் தரம் வாய்ந்த வீரா்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் வாய்ப்பை லேசாக வழங்கிவிட்டாலும், அதை அவா்கள் பிடித்துக் கொள்வாா்கள் என்பதை இந்த ஆட்டம் முழுவதுமாக உணா்ந்தோம்.
ஒரே நாளில் 10 விக்கெட்டுகளை இழந்தது ஏற்புடையதாக இல்லை. எனினும் லாா்ட்ஸ் தோல்வியிலிருந்து எவ்வாறு மீண்டோமோ, அதேபோல் இந்த இழப்பிலிருந்தும் மீண்டு ஓல்ட் டிராஃபோா்ட் டெஸ்டை எதிா்கொள்வோம். அதற்காக எங்களது மனநிலையை தகுதிப்படுத்திக் கொள்ள அடுத்த இரு நாள்களை செலவிடுவோம். 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் வகையிலான ஒரு பிளேயிங் லெவனை தயாா் செய்வது குறித்து யோசிப்போம்.
- ஜோ ரூட் (இங்கிலாந்து கேப்டன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...