மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆப்கன் வீரர்கள் அணியில் இணைந்தனர்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் முகமது நபி ஐக்கிய அரபு அமீரகத்தில் அணியில் இணைந்துவிட்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :13 செப்டம்பர் 2021, 3:25 pm

DIN


ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் முகமது நபி ஐக்கிய அரபு அமீரகத்தில் அணியில் இணைந்துவிட்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தகவலறிந்த வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியது:

"ரஷித் கான் மற்றும் முகமது நபி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளனர். தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வெறுமன வீரர்கள் மட்டுமல்ல, குடும்பத்தினர். தொடர் நடைபெறும்போது மட்டுமல்ல, அனைத்து நேரங்களிலும் அணி அவர்களை முழுமையாகப் பார்த்துக்கொள்ளும். அவர்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்த நல்ல மனநிலையில் இருப்பதை அணி நிர்வாகம் உறுதி செய்யும்." 

முன்னதாக, டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்கும்போது தனது கருத்தைக் கேட்காமலே தன்னைக் கேப்டனாக அறிவித்ததால், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ரஷித் கான் வியாழக்கிழமை முடிவெடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.