பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அணியில் மீண்டும் ஷ்ரேயஸ் இணைந்திருப்பது பெரிய பலம்: கைஃப்

​14-வது ஐபிஎல் சீசனின் 2-வது பகுதியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் இணைந்திருப்பது பெரிய பலமாக இருக்கும் என அணியின் துணைப் பயிற்சியாளர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :15 செப்டம்பர் 2021, 8:52 am

DIN


14-வது ஐபிஎல் சீசனின் 2-வது பகுதியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் இணைந்திருப்பது பெரிய பலமாக இருக்கும் என அணியின் துணைப் பயிற்சியாளர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் கைஃப் கூறியது:

"முதல் பாதி ஐபிஎல்-க்குப் பிறகு பெரிய இடைவேளை இருக்கிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பெரும்பாலான வீரர்கள் தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர். முதல் பாதியில் விளையாடிய அணியிலிருந்து நிறைய மாற்றங்கள் இல்லை. எனினும், அணியில் ஷ்ரேயஸ் ஐயர் இணைந்திருப்பது எங்களுக்குப் பெரிய பலம். அவர் சிறந்த வீரர். கடந்த 2 சீசன்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த சீசனில் களமிறங்குவதை எதிர்நோக்கி இருக்கிறேன்."

இந்தியாவில் நடைபெற்ற 14-வது ஐபிஎல் சீசன் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதன் 2-ம் பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வரும் 22-ம் தேதி எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.