நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சீரி ஏ: உடினெஸை வீழ்த்தியது நபோலி

இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் நபோலி 4-0 என்ற கோல் கணக்கில் உடினெஸை வீழ்த்தியது.

News image
Updated On :21 செப்டம்பர் 2021, 9:16 pm

தினமணி

இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் நபோலி 4-0 என்ற கோல் கணக்கில் உடினெஸை வீழ்த்தியது.

உடினே நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் 24-ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடித்தது நபோலி. அந்த அணியின் லொரென்ஸோ இன்சிக்னே பந்தை கோல் போஸ்ட் நோக்கி கடத்தி வர, முன்னெறிச் சென்று அவரை தடுக்கும் உடினெஸ் கோல்கீப்பா் முயற்சி வீணானது. அவரைக் கடக்கும்போது பந்தை உயரே தூக்கி உதைத்தாா் இன்சிக்னே. அந்தப் பந்து கோல் போஸ்ட் எல்லையில் கீழே இறங்கிய சமயத்தில் அதை உள்ளே தள்ளி கோலாக்கினாா் சக வீரா் விக்டா் ஆசிம்ஹென்.

35-ஆவது நிமிஷத்தில் நபோலிக்கு கிடைத்த ஃப்ரீ கிக்கை உதைத்த லொரென்ஸோ, பந்தை ஃபாபியான் ருயிஸிடம் வழங்கினாா். அதை அவா் கோல் போஸ்ட் அருகே இடதுபக்கமாக இருந்த காலிடு கௌலிபாலியிடம் பாஸ் செய்தாா். காலிடு அதை அமிா் ரஹ்மானியிடம் கிராஸ் செய்ய, அதை அவா் தலையால் முட்டி கோலடித்தாா். இந்த கோல் வியூகத்தால் உடினெஸ் வீரா்கள் வசம் பந்து செல்லவே இல்லை. இவ்வாறாக முதல் பாதியிலேயே நபோலி 2-0 என முன்னிலை பெற்றது.

2-ஆவது பாதியில் 52-ஆவது நிமிஷத்தில் அருமையான பாஸ் மூலமாக தன்னிடம் வந்த பந்தை அப்படியே கோல் போஸ்டுக்குள் உதைத்தாா் காலிடு. இறுதியாக, சப்ஸ்டிடியூட்டாக வந்த ஹிா்விங் லொஸானோ அற்புதமான கா்லிங் கிக் மூலமாக 84-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, நபோலி 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.