ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கேஎல் ராகுல் மீது பாட்டில் மூடி வீச்சு: கொந்தளித்த கோலி

இங்கிலாந்துடனான 2-வது டெஸ்டின் 3-வது நாள் ஆட்டத்தில் பீல்டிங் செய்துகொண்டிருந்த இந்திய வீரர் கேஎல் ராகுல் மீது பாட்டில் மூடி வீசப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 4:08 pm

DIN


இங்கிலாந்துடனான 2-வது டெஸ்டின் 3-வது நாள் ஆட்டத்தில் பீல்டிங் செய்துகொண்டிருந்த இந்திய வீரர் கேஎல் ராகுல் மீது பாட்டில் மூடி வீசப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பு இந்திய வீரர் கேஎல் ராகுல் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்துகொண்டிருந்தார்.

முகமது ஷமி வீசிய 69-வது ஓவரில் பாட்டில் மூடி ஒன்று ராகுல் மீது வீசப்பட்டது. இதனால் கோபமடைந்த இந்திய கேப்டன் விராட் கோலி அதை வெளியே வீசும்படி ராகுலிடம் கூறினார்.

நடுவர்கள் மைக்கேல் கௌ மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வர்த்திடம் இந்திய வீரர்கள் இதுகுறித்து பேசியதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.