காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உலகின் நெ.1 டி20 பந்துவீச்சாளரை அள்ளியது ராஜஸ்தான் ராயல்ஸ்!

உலகின் நெ. 1 டி20 பந்துவீச்சாளர் ஷம்சியை இந்த வருட ஐபிஎல் போட்டிக்குத் தேர்வு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 8:39 am

DIN

உலகின் நெ. 1 டி20 பந்துவீச்சாளர் ஷம்சியை இந்த வருட ஐபிஎல் போட்டிக்குத் தேர்வு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 31 வயது ஷம்சி - 2 டெஸ்டுகள், 27 ஒருநாள், 39 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த மாதம், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-2 என வென்று அசத்தியது தென் ஆப்பிரிக்க அணி. டி20 தொடர் முழுக்கச் சிறப்பாகப் பந்துவீசிய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி, தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஆர்ச்சர், பட்லர் போன்றோர் விளையாடாததால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஸ்டோக்ஸ் பங்கேற்பாரா என்பது இதுவரை தெரியவில்லை. ஆண்ட்ரூ டையும் விலகிவிட்டார். இந்நிலையில் உலகின் நெ. 1 டி20 பந்துவீச்சாளரான ஷம்சியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் 7 ஆட்டங்களில் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது ராஜஸ்தான் அணி. 

கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஷம்சியை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 2016 முதல் 2018 வரை ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஷம்சி, இதுவரை 4 ஐபிஎல் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் கெய்ல், லூயிஸ், பொலார்ட், ரஸ்ஸல், பூரன், ஹெட்மையர் என அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் சிறப்பாகப் பந்துவீசி தனது அணிக்கு வெற்றி தேடித்தந்தார் ஷம்சி. தொடர் முழுக்கவே குறைந்த அளவில் ரன்கள் கொடுத்து மே.இ. தீவுகள் அணியைக் கட்டுப்படுத்தினார். முதல் டி20 ஆட்டத்தில் மட்டுமே 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்தார். அடுத்த 4 டி20 ஆட்டங்களிலும் ஒரு ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் அவர் கொடுக்கவில்லை. டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணியின் மிகப்பெரிய பலமாக, எதிரணிகளை அச்சுறுத்தும் பந்துவீச்சாளராக ஷம்சி இருக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னோட்டத்தை ஐபிஎல் போட்டியில் காண முடியுமா?

மே.இ. தீவுகள் டி20 தொடரில் ஷம்சியின் பந்துவீச்சு

4-0-27-1
4-0-16-1
4-0-13-2
4-0-13-2
4-0-11-1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.