இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் குறித்து கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா, அதுவரை அறியப்பட்ட மற்ற வகை கரோனாக்களைவிட அதிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று கூறப்படுவது உலகின் பல்வேறு நாடுகளிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கும் அந்த நாடுகளுக்கு தங்கள் நாட்டிலிருந்து பயணிகள் செல்வதற்கும் உலக நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்துள்ளன. மேலும், தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணிகள் வருவதற்கு பல நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டிசம்பர் 17-ல் தொடங்கி ஜனவரி 26 வரை நடைபெறுகிறது. டிசம்பர் 8 அன்று இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்குக் கிளம்பிச் செல்வதாத் திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கரோனா பயம் காரணமாக இந்திய அணி 5-வது டெஸ்டில் பங்கேற்க மறுத்தது. கடந்த வருடம் தென்னாப்பிரிக்க அணியில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் விளையாடாமல் நாடு திரும்பியது. ஆஸ்திரேலிய அணியும் தென்னாப்பிரிக்காவில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க மறுத்தது. இந்தச் சூழலில் உருமாறிய புதிய வகை கரோனா தொற்று காரணமாக திட்டமிட்டபடி தெ.ஆ. - இந்தியா தொடர் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் நாளை தொடங்குகிறது. இந்திய கேப்டன் விராட் கோலி, தெ.ஆ. சுற்றுப்பயணம் குறித்து இன்று கூறியதாவது:
தெ.ஆ. சுற்றுப்பயணம் குறித்து கேள்வி எழுவது இயல்பானது. சாதாரண நிலைமையில் நாம் கிரிக்கெட் ஆட்டங்களை விளையாடவில்லை. நிலைமை குறித்து அறிய நிறைய புரிதல்கள் அவசியம். இந்த அணியில் இல்லாத வீரர்களும் அணியினருடன் இணைந்து, தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு தனி விமானத்தில் பயணிக்கவுள்ளார்கள். தெ.ஆ. சுற்றுப்பயணம் தொடர்பான விவாதத்தை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தொடங்கியுள்ளார். பிசிசிஐயுடன் பேசி வருகிறோம். ஓரிரு நாள்களில் தெ.ஆ. சுற்றுப்பயணம் குறித்து தெளிவான நிலை தெரியவரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிவாயு உருளை கூடுதல் விலைக்கு விற்பனை: மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் பெருந்துறை திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

மக்களின் ஆதரவால் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்: வி.செந்தில்பாலாஜி

கோவை ரயில்கள் தாமதமாக இயக்கம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


