ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

83 படம் பார்த்த விராட் கோலி என்ன சொன்னார்?

இதைவிடவும் சிறப்பான முறையில் இந்திய கிரிக்கெட்டின் மகத்தான தருணத்தை...

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:07 am

DIN

1983-ம் ஆண்டு கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை ‘83’ என்ற பெயரில் படமாக உருவாகியுள்ளது. கபீா்கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீா் சிங்கும் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவாவும் நடித்துள்ளார்கள். 83-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரரின் கதாபாத்திரங்களிலும் பொருத்தமானவா்களைத் தோ்வு செய்து நடிக்க வைத்துள்ளனா். இந்திய கிரிக்கெட் ரசிகா்கள் மத்தியில் இந்தப் படம் பெரிதும் எதிா்பாா்க்கப்பட்டது.

கடந்த வருடம் வெளியாவதாக இருந்த இப்படம் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வெளியான இப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளார் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி. ட்விட்டரில் அவர் கூறியதாவது:

இதைவிடவும் சிறப்பான முறையில் இந்திய கிரிக்கெட்டின் மகத்தான தருணத்தை மீட்டுக்கொண்டு வர முடியாது. அற்புதமாக உருவாக்கப்பட்ட இந்தப் படம் 1983 உலகக் கோப்பையின்போது உண்டான உணர்வுகளிலும் நிகழ்வுகளிலும் நம்மை மூழ்கடிக்கிறது. அனைவரும் அற்புதமாக நடித்துள்ளார்கள். ரன்வீர் சிங் சிறப்பாக நடித்துள்ளார் எனப் பாராட்டியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.