முதல் டெஸ்டில் ரஹானே விளையாடுவாரா?: ராகுல் டிராவிட் பதில்

முதல் டெஸ்டில் ரஹானே விளையாடுவது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார்.
முதல் டெஸ்டில் ரஹானே விளையாடுவாரா?: ராகுல் டிராவிட் பதில்

முதல் டெஸ்டில் ரஹானே விளையாடுவது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. தெ.ஆ. அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. ஒமைக்ரான் தொற்று பாதிப்பால் டி20 தொடா் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட விராட் கோலி, டெஸ்ட் அணியின் கேப்டனாக நீடிக்கிறாா். டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோஹித் சா்மா, காயத்தால் இடம் பெறவில்லை. கே.எல். ராகுல் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டியளித்ததாவது:

ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர், விஹாரி இவர்களில் யார் 5-வது பேட்டராகக் களமிறங்குவார் என்கிற முடிவை எடுப்பது கடினமானது. எங்களுடைய டெஸ்ட் அணியில் ரஹானே முக்கியப் பங்கு வகிக்கிறார். கடந்த 15-18 மாதங்களில் மெல்போர்னில் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். லார்ட்ஸில் புஜாராவுடன் இணைந்து முக்கியமான கூட்டணி அமைத்தார். அந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றியடைய உதவியது. நடுவரிசையில் அவர் முக்கியமான வீரர். ஷ்ரேயஸ் ஐயர் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நன்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். விஹாரியும் முக்கியமான ஆட்டங்களில் ரன்களை எடுத்துள்ளார். எனவே இது கடினமான முடிவு. இன்றும் நாளையும் இதுபற்றி விவாதித்து ஒரு முடிவெடுப்போம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com