கே.எல். ராகுலின் சதத்தால் முதல் நாளில் அசத்திய இந்திய அணி: ஹைலைட்ஸ் விடியோ

இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
கே.எல். ராகுலின் சதத்தால் முதல் நாளில் அசத்திய இந்திய அணி: ஹைலைட்ஸ் விடியோ

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் கே.எல். ராகுலின் சதத்தால் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. தெ.ஆ. அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. ஒமைக்ரான் தொற்று பாதிப்பால் டி20 தொடா் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட விராட் கோலி, டெஸ்ட் அணியின் கேப்டனாக நீடிக்கிறாா். டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோஹித் சா்மா, காயத்தால் இடம் பெறவில்லை. கே.எல். ராகுல் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. துணை கேப்டன் ராகுல் 122, ரஹானே 40 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ராகுல் 1 சிக்ஸரும் 17 பவுண்டரிகளும் அடித்துள்ளார். தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 60 ரன்களும் கோலி 35 ரன்களும் எடுத்தார்கள். தெ.ஆ. வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடி 3 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com