ஓய்வில்லை: இலங்கை அணியில் மீண்டும் விளையாட மேத்யூஸ் ஒப்புதல்
By DIN | Published On : 13th October 2021 03:00 PM | Last Updated : 13th October 2021 03:00 PM | அ+அ அ- |

இலங்கை அணியில் மீண்டும் விளையாட ஆல்ரவுண்டர் மேத்யூஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் - இலங்கை வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக இலங்கை அணியில் விளையாட மேத்யூஸ் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் சில கிரிக்கெட் தொடர்களிலும் டி20 உலகக் கோப்பை அணியிலும் அவர் இடம்பெறவில்லை. இலங்கை கிரிக்கெட் வாரியத்துடனான மோதலில் ஓய்வுபெறும் எண்ணத்தில் மேத்யூஸ் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
பிறகு, இலங்கை வீரர்களின் ஒப்பந்த விவகாரம் சுமூகமாக முடிவடைந்தது. இந்நிலையில் இலங்கை அணியில் மீண்டும் விளையாட மேத்யூஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வருங்கால கிரிக்கெட் தொடர்களில் இடம்பெறுவதற்காக மேத்யூஸ் பயிற்சியில் ஈடுபடவுள்ளார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.