ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. டிசம்பர் 8-ல் ஆரம்பிக்கும் ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கேன்பெராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது.
2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. ஆஷஸ் தொடரில் நடைபெற்ற 335 டெஸ்டுகளில் 136-ல் ஆஸ்திரேலியாவும் 108-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 91 டெஸ்டுகள் டிரா ஆகியுள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது.
இந்நிலையில் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். நான்கரை மாதங்களாக கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ், காயத்திலிருந்து மீண்டு நல்ல உடல்நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து ஆஷஸ் தொடருக்கான அணியில் அவரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. ஆர்ச்சர், ஆலி ஸ்டோன் அணியில் இல்லாத நிலையில் ஸ்டோக்ஸின் வருகை இங்கிலாந்து அணிக்குப் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. இதனால் கடந்த 11 வருடங்களில் ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை முதல்முறையாக இங்கிலாந்து அணி வெல்லக்கூடிய வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதாக அறியப்படுகிறது.
என்னுடைய மனநலம் தொடர்பாக ஓய்வெடுத்தேன். என்னுடைய விரலில் ஏற்பட்ட காயத்தைச் சரிசெய்துவிட்டேன். என்னுடைய அணி வீரர்களைச் சந்திக்க ஆவலாக உள்ளேன். அவர்களுடன் இணைந்து விளையாட வேண்டும். ஆஸ்திரேலியா செல்ல நான் தயார் என தன்னுடைய முடிவு குறித்து ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக பேரவைத் தேர்தலை நடத்த எத்தனை கோடி ஒதுக்கீடு? அர்ச்சனா பட்நாயக் தகவல்
கோபியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!

போலீஸ், வழக்குரைஞர், தொழிலதிபர் வித்தியாசமான கதைகளில் சூர்யா!

தமிழ்ப் புத்தாண்டு, விஷு: சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு எப்போது?
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


