ஆஸ்திரேலியாவுக்கு 4-0 ஆஷஸ் வெற்றி, இன்னொரு டெஸ்ட்?: டேவிட் வார்னர் பதில்

நான் சரியாக ரன்கள் எடுக்காதபோது கடுமையாகப் போராடிச் சிறப்பாக விளையாடுவேன்.
ஆஸ்திரேலியாவுக்கு 4-0 ஆஷஸ் வெற்றி, இன்னொரு டெஸ்ட்?: டேவிட் வார்னர் பதில்

ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று தொடக்க வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. டிசம்பர் 8-ல் ஆரம்பிக்கும் ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கேன்பெராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது. 

2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இதுவரை நடைபெற்ற 71 ஆஷஸ் தொடர்களில் 33-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. ஆஷஸ் தொடரில் நடைபெற்ற 335 டெஸ்டுகளில் 136-ல் ஆஸ்திரேலியாவும் 108-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 91 டெஸ்டுகள் டிரா ஆகியுள்ளன. 2017-18 ஆஷஸ் தொடரை வென்று 2019 தொடரை சமன் செய்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலிய அணி வசம் உள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று தொடக்க வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

தலைப்புச் செய்திகளை வழங்குவதில் நான் சிறந்தவன். இது சவால் அளிக்கக்கூடியது. 5-0 என்கிற வெற்றியை மெக்ராத் விரும்புவார். ஆஸ்திரேலிய அணிக்கு 4-0 வெற்றி கிடைக்கும் என்கிறேன். வானிலை காரணமாக ஒரு டெஸ்டின் முடிவை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. நான் சரியாக ரன்கள் எடுக்காதபோது கடுமையாகப் போராடிச் சிறப்பாக விளையாடுவேன். கடந்த 18 மாதங்களாக கரோனா காரணமாக தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போனது. அடுத்தடுத்து தொடர்களில் முன்பு விளையாடினோம். அதுபோல அடுத்தடுத்த ஆட்டங்களில் விளையாட முயல்கிறேன் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com