‘பாகிஸ்தான் கிரிக்கெட்டைக் அழித்த நியூசிலாந்து’: கோபப்பட்ட சோயிப் அக்தர்

பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டிகளை இறுதி நிமிடத்தில் ரத்து செய்ததன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து அழித்துவிட்டதாக சோயிப் அக்தர் விமரிசனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டு நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு வந்தது. 18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்வதால் இந்தத் தொடர் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

முதல் ஒருநாள் ஆட்டம் ராவல்பிண்டியில் இன்று நடைபெற இருந்த நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக நியூசிலாந்து அணி அறிவித்தது.

நியூசிலாந்து அணியின் இந்த அறிவிப்பிற்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “பாகிஸ்தான் கிரிக்கெட்டை நியூசிலாந்து அழித்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, ஜிம்பாவே உள்ளிட்ட அணிகளுடனான போட்டிகளை பாதுகாப்பாக பாகிஸ்தான் நடத்தியுள்ளது. கரோனா அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. இன்றைய அச்சுறுத்தல் உறுதிப்படுத்தப்படாத ஒன்று. இதுகுறித்து விவாதித்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com