டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மும்பை இந்தியன்ஸ் அணியினருடன் மீண்டும் இணைந்த சச்சின் டெண்டுல்கர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் மும்பை அணியினருடன் சச்சின் மீண்டும் இணைந்துள்ளார்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:17 am

DIN

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, நாளை (செப்டம்பா் 19) ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

இந்நிலையில் மும்பை அணியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கர், அணி வீரர்களுடன் மீண்டும் இணைந்துள்ளார். ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு 2013 முதல் மும்பை அணியின் ஆலோசகராக சச்சின் பணியாற்றி வருகிறார். கடந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சச்சின் செல்லவில்லை. இந்த வருடம் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் இந்தியாவில் ஐபிஎல் நடைபெற்றபோதும் அவர் மும்பை அணியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மும்பை அணியினருடன் சச்சின் மீண்டும் இணைந்துள்ளார். 6 நாள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, அணி வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் சச்சின் பகிர்ந்துள்ளார். மும்பை அணியில் சச்சினின் மகன் அர்ஜுன் இடம்பெற்றுள்ளார். 

7 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.