மகளிர் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்திய நடுவர்

மகளிர் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ். லட்சுமி போட்டி நடுவராகப் பணியாற்றவுள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்திய நடுவர்

மகளிர் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ். லட்சுமி போட்டி நடுவராகப் பணியாற்றவுள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த ஜி.எஸ். லட்சுமி, நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பையில் பணியாற்றி வருகிறார். 2-வது அரையிறுதிச் சுற்றில் போட்டி நடுவராகப் பணியாற்றிய லட்சுமி அடுத்ததாக ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஏப்ரல் 3 அன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் போட்டி நடுவராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐசிசி சர்வதேச நடுவர்கள் பட்டியலில் இடம்பிடித்த முதல் பெண் என்கிற பெருமையைக் கொண்டவர் ஜி.எஸ். லட்சுமி. மகளிர் போட்டிகளில் மட்டுமல்லாமல் ஆடவர் போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றியுள்ளார். ஆடவர் ஒருநாள் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய முதல் பெண் நடுவர் என்கிற பெருமையும் கொண்டவர்.  

கள நடுவர்கள் இருவர், மூன்றாவது நடுவர், போட்டி நடுவர் என மகளிர் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் பணியாற்றவுள்ள நான்கு நடுவர்களும் பெண்களே. கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இதுபோல  நடுவர்கள் அனைவரும் பெண்களாக இருப்பது இதுவே முதல்முறை என ஐசிசி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com