360 டிகிரி வீரர்: பதோனியைப் பாராட்டும் கே.எல். ராகுல்

இந்த வருட ஐபிஎல் போட்டியின் வழியாக இந்திய வீரர் பதோனியின் திறமையை அறிய முடிந்தது என லக்னெள அணி கேப்டன் கே.எல். ராகுல் கூறியுள்ளார்.
360 டிகிரி வீரர்: பதோனியைப் பாராட்டும் கே.எல். ராகுல்

இந்த வருட ஐபிஎல் போட்டியின் வழியாக இந்திய வீரர் பதோனியின் திறமையை அறிய முடிந்தது என லக்னெள அணி கேப்டன் கே.எல். ராகுல் கூறியுள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற சென்னை - லக்னெள அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் லக்னெள அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற லக்னெள, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. உத்தப்பா 50, ஷிவம் டுபே 49 ரன்கள் எடுத்தார்கள். அவேஷ் கான், பிஸ்னோய், டை ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். கடினமான இலக்கை நன்கு விரட்டிய லக்னெள அணி, 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ராகுல் 40, குயிண்டன் டி காக் 61, எவின் லூயிஸ் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்தார்கள். 

கடைசி இரு ஓவர்களை ஷிவம் டுபேவும் முகேஷ் செளத்ரியும் வீசியது லக்னெள அணிக்கு வசதியாக இருந்தது. 19-வது ஓவரை வீசிய டுபே, 25 ரன்களைக் கொடுத்தார். இதனால் சென்னையின் அணியின் முடிவுகளைப் பலரும் விமர்சித்துள்ளார்கள். 

ஐபிஎல் போட்டியின் அறிமுக ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிராக 54 ரன்கள் எடுத்த 22 வயது வீரர் பதோனி, சிஎஸ்கேவுக்கு எதிராகக் கடைசிக் கட்டத்தில் களமிறங்கி 9 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 19 ரன்கள் எடுத்தார்.

பதோனி பேட்டிங் பற்றி லக்னெள அணி கேப்டன் கே.எல். ராகுல் கூறியதாவது: 

பதோனியின் பேட்டிங் காணொளிகள் சிலவற்றைப் பார்த்துள்ளேன். அதில் நல்ல ஷாட்களை அவர் ஆடுவதைத்தான் பார்க்க முடியும். ஆனால் ஐபிஎல் ஆட்டங்களில் அவர் ஆடியவிதம் அற்புதம். 360 டிகிரி வீரர் அவர். ஐபிஎல் போட்டியால் கண்டுபிடிக்கப்பட்ட திறமை. இந்தியாவுக்கு இது நல்லது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பெரிய பலமாக இருப்பார் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com