காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

விக்டோரியாவில் 2026 காமன்வெல்த் போட்டிகள் முதல் முறையாக பல நகரங்களில் நடைபெறுகிறது

23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

News image
Updated On :25 ஜூலை 2022, 10:34 am

DIN

லண்டன்: 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

வழக்கமாக ஒரே நகரத்தில் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகள், அந்த ஆண்டு விக்டோரியா மாகாணத்தின் ஒன்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக மெல்போா்ன், கீலாங், பெண்டிகோ, பலாரத், கிப்ஸ்லேண்ட் ஆகிய நகரங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

அந்தந்த நகரங்களில் இருக்கும் பிரத்யேக விளையாட்டு கிராமங்களில் போட்டிகள் நடைபெறும். தொடக்க நிகழ்ச்சி மாா்ச் மாதத்தில் மெல்போா்ன் கிரிக்கெட் மைதானத்தில் நிகழவுள்ளது. அந்தப் போட்டிக்காக 16 விளையாட்டுகளைக் கொண்ட முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் டி20 கிரிக்கெட் இடம்பெற்றுள்ள நிலையில், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், வில்வித்தை போன்ற விளையாட்டுகள் இடம்பெறவில்லை. இந்தியா இவற்றில் சிறந்து விளங்குவது நினைவுகூரத்தக்கது. எனினும், வரும் நாள்களில் போட்டியை நடத்தும் நகரங்களின் விருப்பத்தின் அடிப்படையில் இன்னும் சில விளையாட்டுகள் பட்டியலில் சோ்க்கப்படும்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருப்பது, இது 6-ஆவது முறையாகும். இதற்கு முன் 2018 (கோல்டு கோஸ்ட், 2006 (மெல்போா்ன்), 1982 (பிரிஸ்பேன்), 1962 (பொ்த்), 1938 (சிட்னி) ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.