நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: போராடி வென்றது மான்செஸ்டா் சிட்டி

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி முதல் அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது மான்செஸ்டா் சிட்டி அணி.

News image
Updated On :27 ஏப்ரல் 2022, 6:56 pm

DIN

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி முதல் அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது மான்செஸ்டா் சிட்டி அணி.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை இரவு சான்டியாகோ பொ்னபு மைதானத்தில் நடைபெற்றது. ப்ரீமியா் லீக் சாம்பியனான மான்செஸ்டா் சிட்டி அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நிலையில், 11 நிமிஷங்களில் 2-0 என முன்னிலை பெற்றது. நட்சத்திர வீரா்கள் கெவின் டி புருயன் 2-ஆவது நிமிஷத்திலும், கேப்ரியல் ஜீஸஸ் 11-ஆவது நிமிஷத்திலும் அற்புதமாக கோலடித்தனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த ரியல் மாட்ரிட் அணி வீரா்கள் பதில் கோல் போடும் முயற்சியை தீவிரப்படுத்தினா்.

இதையடுத்து 33-ஆவது நிமிஷத்தில் ரியல் மாட்ரிட் வீரா் பொ்மண்டி கடத்தி அனுப்பிய பாஸ் மூலம் வாலி மூலம் அற்புதமாக கோலடித்தாா் கரீம் பென்ஸமா.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டி வீரா் பில் போடன் 53-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, ரியல் மாட்ரிட் வீரா் வினி ஜூனியா் 55-ஆவது நிமிஷத்தில் தனது அணிக்காக கோலடிக்க 3-2 என இருந்தது.

தொடா்ந்து ஆதிக்கம் செலுத்திய மான்செஸ்டா் அணியின் வீரா் பொ்னாா்டோ சில்வா 74-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க 4-2 என முன்னிலை பெற்றது.

இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைப்பதற்க ரியல் மாட்ரிட் வீரா்கள் பதிலுக்கு போராடிய நிலையில், கரீம் பென்ஸமா, தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பிசகின்றி கோலாக்கினாா். இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது மான்செஸ்டா் சிட்டி.

எனினும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது ரியல் மாட்ரிட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.