காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதன் மூலம் ஐந்தாவது நாளான இன்று, இந்தியா இரண்டாவது தங்கம் வென்றுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் பா்மிங்ஹாம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ஐந்தாவது நாளான இன்று பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இதையும் படிக்க: காமன்வெல்த்: இந்தியாவுக்கு 4வது தங்கம்
டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி சிங்கப்பூர் அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 10-12, 11-7, 7-11, 4-11 என்ற புள்ளி கணக்கில் சிங்கப்பூர் அணியை இந்திய அணி வீழ்த்தியது. சத்யன் ஞானசேகரனின் சிறப்பான ஆட்டத்தால், 3-1 என்ற விகிதத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.
இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல், சத்யன் ஞானசேகரன் ஆகிய வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுவரை, மொத்தமாக இந்தியா அணி காமன்வெல்த் போட்டியில் 5 தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா இன்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


