கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

காமன்வெல்த்: பி.வி. சிந்துவுக்குத் தங்கம்

காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்றுள்ளார்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2022, 11:21 am

DIN

காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்றுள்ளார்.

பிர்மிங்கமில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் இறுதிச்சுற்றில் கனடாவின் மிஷெல் லீயை எதிர்கொண்டார் இந்தியாவின் சிந்து. இதற்கு முன்பு இருவரும் விளையாடிய 10 ஆட்டங்களில் 8-ல் சிந்து வெற்றியடைந்திருந்தார். எனினும் காலில் ஏற்பட்ட காயத்துடன் அரையிறுதியில் அவர் விளையாடினார். இதனால் இறுதிச்சுற்றிலும் காயத்தால் அவருக்கு பாதிப்பு ஏற்படுமா என ரசிகர்கள் கவலைப்பட்டார்கள். 

இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் 21-15, 21-15 என வெற்றி பெற்று தங்கம் வென்றார் பி.வி. சிந்து. 2014 காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்ற சிந்து, 2018-ல் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது காமன்வெல்த் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் முதல்முறையாகத் தங்கம் வென்றுள்ளார். 

2022 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெல்லும் 19-வது தங்கம் இது. இதுவரை 19 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என 56 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.