கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நிறைவடைந்தன காமன்வெல்த் போட்டிகள்: இந்திய அணி சாதித்தது என்ன?

மல்யுத்தம், பளு தூக்குதல், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் (பாரா டென்னிஸ் உள்பட) ஆகிய விளையாட்டுகளில்...

News image
Updated On :9 ஆகஸ்ட் 2022, 6:06 am

DIN

இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலகின் பெரிய விளையாட்டுத் திருவிழாக்களில் ஒன்றாக காமன்வெல்த் போட்டி உள்ளது. கடைசியாக கடந்த 2018-இல் ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலத்துடன் மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றது. 

இந்த வருடம் இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த்தில் 66 பதக்கங்களை வென்ற இந்திய அணி, பிர்மிங்கம் போட்டியில் 61 பதக்கங்களை வென்றது. இப்போட்டியில் ஐயாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றார்கள். 

இம்முறை இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-ம் இடம் பிடித்தது. கடைசி நாளன்று பாட்மிண்டனில் பி.வி. சிந்து, சாத்விக் - சிராஜ் ஜோடி, லக்‌ஷயா சென், டேபிள் டென்னிஸில் சரத் கமல் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றார்கள். இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. டேபிள் டென்னிஸில் தமிழக வீரர் சத்யன் வெண்கலப் பதக்கம் வென்றார். 

இந்திய அணி 12 விளையாட்டுகளில் பதக்கங்களை வென்றது. மல்யுத்தம், பளு தூக்குதல், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் (பாரா டென்னிஸ் உள்பட) ஆகிய விளையாட்டுகளில் இந்திய அணி தான் அதிகப் பதக்கங்களை வென்றது. மல்யுத்த விளையாட்டில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக 6 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. அதிகத் தங்கப் பதக்கங்களை வென்றவர் - தமிழகத்தின் சரத் கமல். டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆடவர் அணி, ஒற்றையர், கலப்பு இரட்டையர் என மூன்று போட்டிகளில் அவர் தங்கம் வென்றார். மேலும் ஆடவர் இரட்டையர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் என ஒரே போட்டியில் 4 பதக்கங்களுடன் மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார். 

ஹாக்கி போட்டியில் இந்தியா முதல்முறையாக ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் பதக்கம் வென்றுள்ளது. இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கமும் மகளிர் அணி வெண்கலப் பதக்கமும் வென்றார்கள். 

2026 காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.