டி20 கிரிக்கெட்டில் முதல்முறையாக...: பொலார்ட் புதிய சாதனை

டி20 கிரிக்கெட்டில் 600 ஆட்டங்களை விளையாடிய முதல் வீரர் என்கிற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பொலார்ட் நிகழ்த்தியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் முதல்முறையாக...: பொலார்ட் புதிய சாதனை

டி20 கிரிக்கெட்டில் 600 ஆட்டங்களை விளையாடிய முதல் வீரர் என்கிற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பொலார்ட் நிகழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரட் போட்டியில் லண்டன் - மான்செஸ்டர் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பங்கேற்ற 35 வயது பொலார்ட் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார் (தி ஹண்ட்ரட் போட்டி, டி20 ஆட்டங்களாகவே கருத்தப்படுகிறது). லார்ட்ஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 11 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து அசத்தினார் பொலார்ட். 

600 டி20 ஆட்டங்களில் விளையாடிய பொலார்ட் ஒரு சதம், 56 அரை சதங்கள் உள்பட 11,723 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 309 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

டி20: அதிக ஆட்டங்கள்

பொலார்ட் - 600
பிராவோ - 543
சோயிப் மாலிக் - 472
கெய்ல் - 463

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com