தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இந்திய செஸ் அணிகளுக்குப் பரிசுத்தொகையை வழங்கிய தமிழக முதல்வர்

இரு இந்திய செஸ் அணிகளுக்கும் தலா ரூ. 1 கோடி பரிசுத்தொகையை...

News image
Updated On :10 ஆகஸ்ட் 2022, 10:30 am

DIN

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இரு இந்திய செஸ் அணிகளுக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசுத்தொகையை இன்று வழங்கினார். 

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றது. தமிழக அரசு, சா்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) சாா்பில் ரூ.100 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம் ஃபோா் பாயிண்ட் ஷெரட்டன் ஹோட்டலில் கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கியது. ஓபன் பிரிவில் 187, மகளிா் பிரிவில் 162 நாடுகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை 11-ம் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்றன.

ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான், ஆா்மீனியா, இந்திய பி அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றன. மகளிா் பிரிவில் உக்ரைன், ஜாா்ஜியா, இந்திய ஏ அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றன.

இந்திய பி அணியில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்றிருந்தனா். இந்திய மகளிா் ஏ அணியில் நிறைமாத கா்ப்பிணி ஹரிகா, கொனேரு ஹம்பி, ஆா். வைஷாலி, பக்தி குல்கா்னி, தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனா்.

விளையாட்டு வீரா்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபா் பதக்கங்களில் இந்திய இளம் வீரா்கள் டி. குகேஷ், நிஹல் சரின் ஆகியோா் தங்கம் வென்றனா். ஏ அணி வீரா் அா்ஜுன் எரிகைசி வெள்ளியும் பி அணி வீரா் பிரக்ஞானந்தா வெண்கலமும் வென்றனா். மகளிா் பிரிவில் தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக், ஆா்.வைஷாலி ஆகியோர் வெண்கலம் வென்றனா்.

நேரு விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நிறைவு விழா நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், ஃபிடே தலைவா் அா்காடி வோா்கோவிச், துணைத் தலைவா் விஸ்வநாதன் ஆனந்த் போன்றோர் பரிசளித்தனா்.

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இரு இந்திய அணிகளுக்கும் (ஓபன் பிரிவில் இந்தியா பி, மகளிர் பிரிவில் இந்தியா ஏ)  தலா 1 கோடி ரூபாய் பரிசுத்தொகையை இன்று அறிவித்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இந்நிலையில் இரு இந்திய செஸ் அணிகளுக்கும் தலா ரூ. 1 கோடி பரிசுத்தொகையை இன்று வழங்கினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.