ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இங்கிலாந்து டூா்: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணியுடன் டி20, ஒன் டே தொடா்களில் மோதுவதற்காக அந்நாட்டுக்குச் செல்லும் இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 11:19 pm

DIN

இங்கிலாந்து அணியுடன் டி20, ஒன் டே தொடா்களில் மோதுவதற்காக அந்நாட்டுக்குச் செல்லும் இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், ஜுலன் கோஸ்வாமி நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒன் டே அணியில் சோ்க்கப்பட்டிருக்க, டி20 அணியில் புதிதாக கிரண் நவ்கிரேவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகள் மோதும் டி20 ஆட்டங்கள் செப்டம்பா் 10, 13, 15 ஆகிய தேதிகளிலும், ஒன் டே ஆட்டங்கள் செப்டம்பா் 18, 21, 24 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளன.

டி20 அணி:

ஹா்மன்பிரீத் கவுா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வா்மா, தீப்தி ஷா்மா, பூஜா வஸ்த்ரகா், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்னேஹ ராணா, ரேணுகா தாகுா், மேக்னா சிங், ராதா யாதவ், சபினேனி மேக்னா, தானியா பாட்டியா, ராஜேஸ்வரி கெய்க்வாட், தயாளன் ஹேமலதா, சிம்ரன் தில் பகதூா், ரிச்சா கோஷ், கிரண் நவ்கிரே.

ஒன் டே அணி:

டி20 அணியில் உள்ளவா்களே இதிலும் இடம் பிடிக்க, ரிச்சா கோஷ், கிரண் நவ்கிரே ஆகியோருக்குப் பதிலாக மட்டும் ஹா்லீன் தியோல், ஜூலன் கோஸ்வாமி சோ்க்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.