தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இங்கிலாந்தை மூன்று நாள்களில் நொறுக்கிய தென்னாப்பிரிக்கா (ஹைலைட்ஸ் விடியோ)

லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது தென்னாப்பிரிக்க அணி.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 5:25 am

DIN

இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது தென்னாப்பிரிக்க அணி.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்டுகளில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்கா. முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களைத் தடுமாறச் செய்தார்கள். இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 45 ஓவர்களில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போப் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் போல்ட் ஆனார். தெ.ஆ. பந்துவீச்சாளர்களில் ரபாடா 5 விக்கெட்டுகளும் நோர்கியா 3 விக்கெட்டுகளும் யான்சென் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

தென்னாப்பிரிக்க அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு எல்கரும் எர்வீயும் 85 ரன்கள் சேர்த்தார்கள். எர்வீ 73 ரன்களிலும் எல்கர் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 89.1 ஓவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.பிராட், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முதல் இன்னிங்ஸில் 161 ரன்கள் முன்னிலை பெற்றது தென்னாப்பிரிக்க அணி. சமீபகாலமாக பல்வேறு நெருக்கடியான தருணங்களைச் சிறப்பாக எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, இந்த டெஸ்டில் எப்படி மீண்டு வரப்போகிறது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் 2-வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சு மேலும் உக்கிரமாக இருந்தது. இங்கிலாந்து அணி 37.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வியை அடைந்தது. அலெக்ஸ் லீஸ், பிராட் அதிகபட்சமாகத் தலா 35 ரன்கள் எடுத்தார்கள். நோர்கியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  ஒரு இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்களில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி, டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. லார்ட்ஸ் டெஸ்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ரபாடா ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

2-வது டெஸ்ட் ஆகஸ்ட் 25 அன்று மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.