மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆப்கன் பந்துவீச்சில் சுருண்டது இலங்கை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

News image
Updated On :27 ஆகஸ்ட் 2022, 4:08 pm

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபையில் இன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா, குசால் மெண்டீஸ் ஆகியோர் களமிறங்கினார். 

ஆனால் ஆப்கானிஸ்தான் வீரர்களின் சிறப்பான பந்துவீச்சுக்கு முன்னால் இலங்கை வீரர்களால் நிலைத்துநின்று ஆடமுடியவில்லை. நிசாங்கா 3, மெண்டீஸ் 2, அசலங்கா 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 5 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை ஒரு கட்டத்தில் தடுமாறியது. இந்த நிலையில் களமிறங்கிய தனுஷ்கா குணதிலகா, பானுகா ராஜபக்ச ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இருப்பினும் குணதிலகா 17 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சிறப்பாக விளையாடிய ராஜபக்ச 38 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்அவுட்டாகி வெளியேறினார். இறுதியாக வந்த வீரர்களில் சாமிகா கருணரத்னே 31 ரன்கள் எடுக்க இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் ஃபஸல்ஹக் ஃபரூக்கி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.