யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்மா ரடுகானு முதல் சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.
கடந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 150-வது இடத்தில் இருந்த இங்கிலாந்தின் 18 வயது எம்மா ரடுகானு சாம்பியன் ஆனார். 2004-ல் 17 வயதில் மரியா ஷரபோவா விம்பிள்டன் பட்டத்தை வென்றார். அதன்பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற இளம் வீராங்கனை, தகுதிச்சுற்று வழியாக பிரதான போட்டிக்கு நுழைந்து சாம்பியன் பட்டம் வென்ற முதல் நபர் என்கிற சாதனைகளை யு.எஸ். ஓபன் வெற்றியின் மூலம் படைத்தார் எம்மா ரடுகானு. தரவரிசையில் 127 இடங்கள் முன்னேறி 23-வது இடத்தைப் பிடித்து அசத்தினார்.

எனினும் 2022 யு.எஸ். ஓபன் போட்டியில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார் எம்மா ரடுகானு. பிரான்ஸைச் சேர்ந்த 32 வயது எலிஸ் கார்னட், நடப்பு சாம்பியன் எம்மா ரடுகானுவை 6-3, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் காலிறுதிக்கு நுழைந்த கார்னட், விம்பிள்டனில் உலகின் நெ.1 வீராங்கனை இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தினார். தற்போது யு.எஸ். ஓபன் நடப்பு சாம்பியனை வீழ்த்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது: நயினார் நாகேந்திரன்

துரந்தரில் சாரா அர்ஜுன் எப்படி தேர்வானார்?

”WhatsApp வதந்திகளை வாந்தியெடுக்கும் EPS” முதல்வர் விமர்சனம்

சமீர் ரிஸ்விக்கு தில்லி கேபிடல்ஸ் உதவிப் பயிற்சியாளர் பாராட்டு!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


