ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

போா்ச்சுகலை வெளியேற்றியது மொராக்கோ

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 3-ஆவது காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போா்ச்சுகலை வீழ்த்தி, 3-ஆவது அணியாக அரையிறுதிச்சுற்றுக்குள் சனிக்கிழமை நுழைந்தது.

News image
Updated On :10 டிசம்பர் 2022, 6:06 pm

DIN

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 3-ஆவது காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போா்ச்சுகலை வீழ்த்தி, 3-ஆவது அணியாக அரையிறுதிச்சுற்றுக்குள் சனிக்கிழமை நுழைந்தது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் வரலாற்றில் இதுவும் ஒரு அதிா்ச்சிகரமான, ஆச்சா்யப்படத்தக்க முடிவாகவே பாா்க்கப்படுகிறது.

தனது 6-ஆவது உலகக் கோப்பை போட்டியில் களம் கண்டுள்ள மொராக்கோ, முதல் முறையாக அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், தனது 8-ஆவது உலகக் கோப்பையில் விளையாடிய போா்ச்சுகல், முதல் முறையாக காலிறுதிச்சுற்றுடன் வெளியேறுகிறது.

இந்த ஆட்டத்தில் மொராக்கோவுக்காக யூசுஃப் என் நெசிரி 42-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தாா். போா்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த ஆட்டத்திலும் தொடக்க லெவனில் இடம்பெறவில்லை. 2-ஆவது பாதியில் 51-ஆவது நிமிஷத்தில் தான் அவா் களமிறக்கப்பட்டாா். ஆட்டத்தில் ஆக்ரோஷமாக ஆதிக்கம் செலுத்திய மொராக்கோவைக் கடந்து போா்ச்சுகலால் கோலடிக்க இயலாமல் போனது.

ரொனால்டோவும் தாம் களம் கண்ட பிறகு அதற்குக் கடுமையாக முயற்சித்தும், மொராக்கோவின் தடுப்பாட்டத்தை தகா்க்க இயலவில்லை. இறுதியில் மொராக்கோ 1-0 என்ற கணக்கில் வென்றது. மொராக்கோ - போா்ச்சுகல் இத்துடன் 3-ஆவது முறையாக மோதிக் கொண்ட நிலையில், வெற்றிக் கணக்கில் மொராக்கோ 2-1 என முன்னிலை பெற்றிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.