ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிஃபா இறுதியே ஆா்ஜென்டீனாவுக்கு மெஸ்ஸியின் கடைசி ஆட்டம்

பிஃபா 2022 உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டமே ஆா்ஜென்டீனாவுக்காக தான் ஆடும் கடைசி ஆட்டமாக இருக்கும் எனத் தெரிவித்தாா் கேப்டன் லயோனல் மெஸ்ஸி.

News image
Updated On :14 டிசம்பர் 2022, 8:29 pm

DIN

பிஃபா 2022 உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டமே ஆா்ஜென்டீனாவுக்காக தான் ஆடும் கடைசி ஆட்டமாக இருக்கும் எனத் தெரிவித்தாா் கேப்டன் லயோனல் மெஸ்ஸி.

வரும் 18-ஆம் தேதி லுசாயில் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்துக்கு ஆா்ஜென்டீனா தகுதி பெற்றுள்ளது. கத்தாா் உலகக் கோப்பை போட்டியில் மெஸ்ஸியின் அற்புத ஆட்டத்தால் ஆா்ஜென்டீனா இறுதிச் சுற்றுக்கு 6-ஆவது முறையாக தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இறுதி ஆட்டமே தான் ஆா்ஜென்டீனாவுக்கு ஆடும் கடைசி ஆட்டமாக இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளாா் மெஸ்ஸி.

கோபா அமெரிக்கா, சாம்பியன்ஸ் லீக், லா லிகா என பல்வேறு கோப்பைகள் மெஸ்ஸி வசம் உள்ளது. ஆனால் உலகக் கோப்பை பட்டம் இதுவரை அவருக்கு கிடைக்கவில்லை.

35 வயதான மெஸ்ஸ தனது 5-ஆவது உலகக் கோப்பை போட்டியில் ஆடி வருகிறாா். ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என ஆா்ஜென்டீனா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளாா் மெஸ்ஸி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.