மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ச்சோ ஸ்வீட்: மைக்கை ஐஸ்கிரீமாக எண்ணிய மொராக்கோ வீரரின் மகன்! (விடியோ)

மொராக்கோ கோல் கீப்பர் யசின் பனோ, தனது மகனை இடுப்பில் வைத்துக்கொண்டு பேட்டியளித்தார்.

News image
Updated On :16 டிசம்பர் 2022, 9:35 am

DIN

கத்தார் உலகக் கோப்பைப் போட்டிக்கு அரையிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்த மொராக்கோ அணி, அரையிறுதியில் 0-2 என பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. கால்பந்து உலகக் கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்கிற பெருமையை அடைந்தது மொராக்கோ.

இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பிறகு மொராக்கோ கோல் கீப்பர் யசின் பனோ, தனது மகனை இடுப்பில் வைத்துக்கொண்டு பேட்டியளித்தார். தனக்கு அருகில் இருந்த மைக்கைப் பார்த்த பனோவின் மகன், அதை ஐஸ்கிரீம் என எண்ணி, நாக்கை நீட்டி மைக்கைச் சாப்பிட முயன்றான். சிரித்துக்கொண்டே மகனின் செயலை ரசித்தார் பனோ. இதன்பிறகு இன்னொருமுறையும் நாக்கை நீட்டியபடி மைக்கை சாப்பிட மகன் முயல, அப்போது தன் மகனுக்கு அவன் செய்த தவறைச் சுட்டிக்காட்டினார் பனோ. சமூகவலைத்தளத்தில் இந்தக் காணொளியைப் பகிர்ந்துள்ளது ஃபிஃபா.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.