நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நான்கு மாதங்களில் பயிற்சியாளர் பதவியை ராஜிநாமா செய்த மனோஜ் பிரபாகர்

59 வயது மனோஜ் பிரபாகர் 1984 முதல் 1996 வரை இந்திய அணிக்காக 39 டெஸ்டுகள், 130 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

News image
Updated On :16 டிசம்பர் 2022, 6:35 am

DIN

நேபாள அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார் இந்திய முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர்.

59 வயது மனோஜ் பிரபாகர் 1984 முதல் 1996 வரை இந்திய அணிக்காக 39 டெஸ்டுகள், 130 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாள அணியின் பயிற்சியாளராக பிரபாகர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேபாள அணிக்காக 5 டி20, 7 ஒருநாள் ஆட்டங்களில் பணியாற்றிய பிறகு தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

சமீபத்தில் கென்யாவுக்குச் சென்ற நேபாள அணி, டி20 தொடரை 3-2 எனவும் ஒருநாள் தொடரை 3-0 எனவும் வென்றது. உலகக் கோப்பை சூப்பர் லீக் போட்டியில் ஸ்காட்லாந்து, நமீபியாவிடம் தோல்வியடைந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.