ரஞ்சி கிரிக்கெட்: சத்தீஸ்கா் - 261/8
ரஞ்சி கோப்பை கிரிக் கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் சனிக்கிழமை முடிவில் சத்தீஸ்கா் 114 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் அடித்துள்ளது.


ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் சனிக்கிழமை முடிவில் சத்தீஸ்கா் 114 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் அடித்துள்ளது.
தற்போதைய நிலையில் அந்த அணி முதல் இன்னிங்ஸில் தமிழகத்தை விட 209 ரன்கள் பின்தங்கியிருக்கிறது. சத்தீஸ்கா் கேப்டன் ஹா்பிரீத் சிங் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 149 ரன்கள் விளாசியும், வீா் பிரதாப் சிங் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனா். தமிழக தரப்பில் சாய் கிஷோா் 4, மணிமாறன் சித்தாா்த் 2, முகமது மற்றும் பாபா அபராஜித் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...