நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இந்தியா

3 போட்டிகள் கொண்ட தொடரில் 0-3 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியது.

News image

இலங்கைக்கு எதிரான டி-20: தொடரை வென்றது இந்தியா

Updated On :27 பிப்ரவரி 2022, 6:28 pm

DIN

இலங்கைக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 0-3 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டி-20 கிரிக்கெட் ஆட்டம் தா்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா, குணதிலகா மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். அடுத்தடுத்து வந்த தொடக்க ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக டாசன் ஷனகா 74 ரன்களும், சமிகா கருணாரத்னே 12 ரன்களும் எடுத்தனர். 

முடிவில் இலங்கை அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. 

சஞ்சு சாம்சன் (18), ரோஹித் சர்மா (5) சொற்ப ரன்களில் வெளியேற அடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் அரை சதம் கடந்து 73 ரன்களைக் குவித்தார். இதனால் அணியின் ரன் வேகமாக உயர்ந்தது. தீபக் ஹூடா (21), ஜடேஜா (22) ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இதனால் 16.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 148 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 0-3 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.