டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த டோக்கியோ டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் 69 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போா்கோஹெய்னனுக்கு அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ரூ. 1 கோடி பரிசுத் தொகையும் மாநில காவல் துறையில் டிஎஸ்பி பதவியும் வழங்கினார். தற்போது, லவ்லினா டிஎஸ்பியாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற போது லவ்லினாவுக்கான பரிசுகள் குறித்து முதல்வர் கூறியது:
"அசாமுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று வந்த லவ்லினாவுக்கு பாரிஸ் ஒலிம்பிக் 2024 வரை மாதந்தோறும் ரூ. 1 லட்சம் உதவித் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அவர் பாரிஸில் தங்கம் வெல்வதை கனவாகக் கொண்டுள்ளார். குவாஹட்டியில் ஒரு சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும்.
லவ்லினாவின் குத்துச்சண்டை பயணத்தில் அங்கமாக இருந்த பயிற்சியாளர்கள் பிரஷந்தா தாஸ், பதும் பரௌவா, சந்தியா குருங் மற்றும் ரஃபேல் கமவஸ்கா ஆகியோருக்கு அசாம் மக்கள் நன்றியின் வெளிப்பாடாக தலா ரூ. 10 லட்சம் வழங்கி கௌரவிக்கப்படும்.
லவ்லினாவின் கிராமம் இடம்பெறும் தொகுதியில் குத்துச்சண்டை அகாடமி வசதியுடன் விளையாட்டு வளாகம் அமைக்கப்படவுள்ளது."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இசையமைப்பாளா் காா் கண்ணாடியை உடைத்த வழக்கு: பெண்ணுக்கு நோட்டீஸ்

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் தேரோட்டம்

சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரிக்கை

தில்லியில் சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


