டி20: 64 பந்துகளில் 154* ரன்கள் குவித்து மேக்ஸ்வெல் சாதனை
பிக் பாஷ் லீக் போட்டியில் 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 154 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார் கிளென் மேக்ஸ்வெல்.


பிக் பாஷ் லீக் போட்டியில் 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 154 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார் கிளென் மேக்ஸ்வெல்.
மெல்போர்னில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகளுக்கு இடையிலான பிக் பாஷ் லீக் டி20 ஆட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் அணி, மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரராகக் களமிறங்கிய கேப்டன் மேக்ஸ்வெல், 64 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 22 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 154 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். 18-வது ஓவரில் சந்தீப் லமிச்சனே ஓவரில் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.
பிபிஎல் போட்டியின் 11 வருடத்தில் இதுவே அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும். இதற்கு முன்பு ஸ்டாய்னிஸ் 79 பந்துகளில் 147 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனையை மேக்ஸ்வெல் முறியடித்துள்ளார். மேலும் டி20 கிரிக்கெட்டில் இது 3-வது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு ஆப்கானிஸ்தான், செக் குடியரசு அணிகள் 20 ஓவர்களில் அதிகபட்சமாக தலா 278 ரன்கள் எடுத்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...