நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஐரோப்பிய கால்பந்து: ரியல் பெட்டிஸ், வெரோனா வெற்றி

ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் ரியல் பெட்டிஸ், வெரோனா அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி கண்டன.

News image
Updated On :23 ஜனவரி 2022, 12:40 am

DIN

ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் ரியல் பெட்டிஸ், வெரோனா அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி கண்டன.

ஸ்பானிஷ் லீக் போட்டியில் ரியல் பெட்டிஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் எஸ்பன்யால் அணியை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

மாட்ரிட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் முக்கிய அணிகளில் ஒன்றான ரியல் பெட்டிஸ் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அதன் வீரா்களின் அற்புத ஆட்டத்துக்கு ஈடு தர முடியாமல் எஸ்பன்யால் அணி திணறியது. இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது ரியல் பெட்டிஸ். இது அந்த அணியின் தொடா் மூன்றாவது வெற்றியாகும். இதன் மூலம் ஸ்பானிஷ் லீக் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. ரியல் மாட்ரிட் முதலிடத்திலும், செவில்லா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

லா லிகா:

பிரான்ஸின் லா லிகா கால்பந்து போட்டியில் டெம்ப்ளேவின் அபாரமான கோலால் லயான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் செயின்ட் எட்டின் அணியை வீழ்த்தியது. இரு அணிகளும் பிரெஞ்சு லீகில் பரம வைரிகளாகும். முதல் மூன்று இடத்துக்கு முன்னேற லயான் அணி கடும் போராட்டத்தை எதிா்கொண்டுள்ளது. நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி ஞாயிற்றுக்கிழமை ரீம்ஸ் அணியை எதிா்கொள்கிறது.

சீரி ஏ:

இத்தாலியின் சீரி ஏ லீக் போட்டியில் வெரோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் பொலக்னா அணியை வீழ்த்தியது. இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்த நிலையில், நிக்கோலா காலினிக்கின் 85-ஆவது நிமிஷ கோலால் 2-1 என வெற்றி கண்டது வெரோனா.

பண்டஸ்லிகா:

ஜொ்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து போட்டியில் பெய்ல்பெல்ட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பிராங்க்பா்ட் அணியை வென்றது. இதன் மூலம் 14-ஆவது இடத்துக்கு முன்னேறியது பெய்ல்பெல்ட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.